அந்தியூரில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அந்தியூரில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-10-11 00:12 GMT

 அந்தியூர்

அந்தியூர் வனத்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் மாரிமுத்து ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். விவசாய பயிர்களை அழிக்கும் காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கவேண்டும். கேரள மாநிலத்தில் இருப்பதுபோல் இதற்கனெ புதிய சட்டம் இயற்றவேண்டும். விலங்குகளால் பறிபோகும் மனித உயிர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். காட்டுப்பன்றி, மயில், மான் போன்றவைகளால் நாசமடையும் பயிர்களுக்கு உரிய இழப்பீடை உடனே வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். கள்ளிமடைக்குட்டை, வேதக்காரன்குட்டை, தொப்பம்பாளையம் பகுதி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்