பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர் சிறையில் அடைப்பு

பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2022-06-03 18:42 GMT

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணி. இவரது மனைவி கீதா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மணியும், கீதாவும் அதே பகுதியில் டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். சம்பவத்தன்று கீதா வீட்டில் இருந்தபோது, அவரது வீட்டிற்குள் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜா மகன் ராஜதுரை(வயது 32) நுழைந்தார். அப்போது அவர் கீதாவை தகாத வார்த்தையால் திட்டி, முடியை பிடித்து இழுத்து, வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து, நான் குடிக்கிற டீக்கும், சாப்பிடுகிற வடைக்கும் காசு கேட்பாயா? என்றும், உன் கணவரை கொலை செய்யாமல் விடமாட்டேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மணி வீட்டிற்கு வந்து ராஜதுரையை சத்தம் போட்டார். அதனை தொடர்ந்து ராஜதுரை அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது தொடர்பாக கீதா பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்