சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனைசேலம் கோர்ட்டு தீர்ப்பு

Update: 2023-08-02 20:16 GMT

சேலம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி

சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் அருகே உள்ள தங்கமாபுரிபட்டணம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந் தேதி சாலையில் நடந்து சென்ற 17 வயதுடைய சிறுமி ஒருவரை திடீரென வழிமறித்தார். பின்னர் அவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார்.

அப்போது இதை பார்த்து தடுக்க வந்தவர்களுக்கு பிரகாஷ் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் பிரகாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

5 ஆண்டு சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் போலீசார் சார்பில் விரைவாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்தால் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற குற்றத்திற்காக பிரகாசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,500 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்