மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில்2 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனைசேலம் கோர்ட்டு தீர்ப்பு

Update: 2023-07-31 20:04 GMT

சேலம்

சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விமலா (வயது 65). இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி காலையில் நெத்திமேடு பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணக்காடு பகுதியை சேர்ந்த பிரபு (வயது 38), அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த நாகராஜன் (34) ஆகியோர் விமலாவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 8 பவுன் நகையை பறித்து சென்றனர்.

இதுகுறித்து விமலா அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, நாகராஜன் ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் முதன்மை சார்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் மூதாட்டியை மிரட்டி நகை பறித்த குற்றத்திற்காக பிரபு, நாகராஜன் ஆகியோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வினோதா தீர்ப்பு அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்