சட்டவிரோதமாக யானை தந்தங்கள், புலி பற்கள் பதுக்கல் - நீலகிரியில் 11 பேர் கைது

கூடலூர் அருகே யானை தந்தங்கள், புலி பற்கள் ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்த 11 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2022-07-17 17:31 GMT

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவர்சோலை பகுதியில் சட்டவிரோதமாக யானை தந்தங்கள், புலி நகங்கள் மற்றும் புலி பற்கள் ஆகியவை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து தனிப்படை அமைத்து தேவர்சோலை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த சிலரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் விற்பனை செய்வதற்காக 9 யானை தந்தங்கள், 2 புலி நகங்கள் மற்றும் 2 புலி பற்கள் ஆகியவற்றை வைத்திருந்தது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், இது தொடர்பாக 4 பழங்குடியினர் உள்பட 11 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், இந்த சட்டவிரோத செயலுக்குப் பின்னால் ஒரு பெரிய கும்பல் இருப்பது தெரியவந்தது. அந்த கும்பலை பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் வனத்துறைனர் இறங்கியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்