சென்னை:
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ரொஸ்), பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய அரசின் 'காசி தமிழ் சங்கமம்' என்ற முன்முயற்சிக்கு அறிவுசார் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
இதில் தமிழ்நாட்டுக்கும், வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கும் இடையில் உள்ள ஆழமான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவது இதன் நோக்கமாகும்.
இச்சங்கமம் நிகழ்ச்சி வரும் நவம்பர் 16 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற உள்ளது. மாதம் முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக, தமிழ்நாட்டின் 12 பல்வேறு இடங்களில் இருந்து கலை, இலக்கியம், ஆன்மீகம், கல்வி உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்தவர்களை காசிக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது.
இவர்கள் 8 நாட்கள் காசியில் தங்கியிருந்து காசி,அயோத்தி, கங்கை நதி ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். விருந்தினர்கள் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ராமேஸ்வரத்தில் ஆகிய ஊர்களில் இருந்து 12 வெவ்வேறு தேதிகளில் புறப்படும் ரயில்களில் இணைக்கப்பட்ட சிறப்புப் பெட்டிகளில் காசிக்கு குழுவாகச் செல்ல வேண்டும்.
இவர்கள் 8 நாட்கள் காசியில் தங்கியிருந்து காசி,அயோத்தி, கங்கை நதி ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். விருந்தினர்கள் அனைவருக்கும் பயைச் பசைவு இைவசம். அத்துடன் காசி மற்றும் அநயாத்தியில் தங்குமிட வசதியும் இைவசமாக வழங்கப்படும்.
அனைத்து விருந்தினர்களும் இலவச பயண வசதியும் காசி மற்றும் அயோத்தியில் இலவசமாக தங்குமிட வசதியும் வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் https://kashitamil.iitm.ac.in/ வலைதளத்தில் உடனடியாக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.