துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி.ஆய்வு
செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஐ.ஜி.ஆய்வு மேற்கொண்டார்.
செஞ்சி,
செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்குள்ள வருகை பதிவேடு மற்றும் முக்கிய ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் செஞ்சி உட்கோட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை பற்றி கேட்டறிந்ததோடு, அதனை விரைந்து முடிக்குமாறு அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா,செஞ்சி துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.