'இந்தியை திணிக்க முயன்றால் டெல்லிக்கு சென்று போராடுவோம்' -ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

இந்தியை திணிக்க முயன்றால் டெல்லிக்கு சென்று போராடுவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-15 05:57 GMT

சென்னை,

இந்தி திணிப்பு, ஒரே நுழைவு தேர்வு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது;-

இந்தி எந்த வடிவில் வந்தாலும், எங்களுடைய பதில் 'இந்தி தெரியாது போடா' என்பதுதான். இந்தி தெரியாது போடா என உங்களிடம் சொல்லி கொண்டேதான் இருப்போம். மீண்டும் இந்தியை திணிக்க முயன்றால் டெல்லியில் போராட்டம் நடத்துவோம்.

2010 தேர்தலில் எப்படி உங்களை விரட்டினோமோ, 2024 தேர்தலிலும் விரட்டுவோம். ஒன்றியம் என்று சொன்னால் தான் கோபம் வரும். அதனால் ஒன்றிய அரசு என்று தான் சொல்லுவோம்.

முன்பு போல் இங்கு ஆட்சியில் இருப்பது எடப்பாடி பழனிசாமி அல்ல. இது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி என கூறினார். 


Tags:    

மேலும் செய்திகள்