'நான் உன்ன விட்டு எங்கயும் போகல' - பிரேமலதாவிடம் விஜயகாந்த் குரலில் அருள்வாக்கு கூறிய சாமியார்

விஜயகாந்த் நினைவிடத்திற்கு ஏராளமானோர் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

Update: 2024-01-16 14:55 GMT

சென்னை,

தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. தற்போது, அவரது நினைவிடத்திற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜயகாந்த் நினைவிடத்திற்கு அன்னதானம் வழங்குவதற்காக வந்திருந்தார். அப்போது அங்கு வந்த சாமியார் ஒருவர், காசி விஸ்வநாதர் தன் கனவில் தோன்றி, விஜயகாந்த் சமாதிக்கு சென்று சங்கு ஊதும்படி கூறியதாகவும், அதனாலேயே இங்கு வந்ததாகவும் கூறினார்.

மேலும் அவர் 'கேப்டன் எங்கும் போகவில்லை, உங்கள் மூத்தமகன் உருவில் உங்களுடன் இருக்கிறார்' என்றார். பின்னர் திடீரென அருள் வந்தது போல் கேப்டன் குரலில் பேசிய அவர், 'என்னை பத்தி தெரியுமில்ல? இந்த ஏழை எளிய மக்களை விட்டுட்டு நான் எங்க போகப்போறேன். பிரேமா உன் இதயத்தில்தான் நான் குடியிருக்கிறேன். நான் உன்ன விட்டு எங்கயும் போகல' என கூறினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்