உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்.. வாழ்நாள் முழுமைக்கும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கோடி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-29 17:25 GMT

சென்னை,

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, கோவி செழியன் உள்பட 4 பேரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர். புதிதாக பொறுப்பேற்றவர்களில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கோடி என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

செந்தில்பாலாஜியின் தியாகத்தை நான் வாழ்த்தியதைச் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரை வைத்து கழகத்துக்கு எதிரான சதிச்செயல்களைச் செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. அதற்கு விலையாக 15 மாத சிறையை ஏற்றதுதான் தியாகம். தன்னால் இயக்கத்துக்குக் களங்கம் வரக்கூடாது என்று நினைப்பவர்களால்தான் இந்த இயக்கம் இயங்குகிறது' என இன்றைய அறிக்கையில் என்னை தாங்கிப்பிடித்துள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் கோடி..

பல நூறு ஆண்டுகள் பெரும் தவம் செய்தாலும், உலகு காக்கும் உயர் கொள்கைக் கொண்டவரின் இந்த உன்னதமான அன்பை பெற இயலுமோ..?

உங்கள் கைகளை இறுகப்பற்றிக் கொள்கிறேன்.. வாழ்நாள் முழுமைக்கும்..

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்