மேட்டூர் அனல் மின் நிலைய விபத்தில் சிக்கியவர்களை மீட்க துரிதமாக செயல்பட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

திடீர் விபத்தால் மேட்டூர் அனல் மின் நிலையம் தற்போது பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது.

Update: 2024-12-19 14:40 GMT

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூரில் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் 840, இரண்டாவது பிரிவில் 600 என மொத்தம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாக வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிக்கி 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். மேலும், விபத்து நடந்த பகுதியில் பணிபுரிந்து வந்த இருவர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்போது இருவரும் நிலக்கரி குவியலுக்குள் இருந்து சடலமாக மிட்கப்பட்டுள்ளனர். மேலும், ஒருவர் நிலக்கரி குவியலில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. திடீர் விபத்தால் மேட்டூர் அனல் மின் நிலையம் தற்போது பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மேட்டூரில் அனல் மின் நிலையம் விபத்து தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் மூவர் படுகாயம் அடைந்ததாகவும் இருவர் காணவில்லை என்று வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோர்க்கு உரிய சிகிச்சை அளிக்கவும், விபத்தில் சிக்கியுள்ள இருவரையும் மீட்க துரிதமாக செயல்படுமாறும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். என தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்