நானும் ஒரு விவசாயி, விவசாயியின் கஷ்டம் எனக்கு தெரியும்: எடப்பாடி பழனிசாமி

தேனி தொகுதியில் பல பேர் சவால் விட்டிருக்கிறார்கள்; ஆனால் அவர்களின் கனவு பலிக்காது என்பதற்கு இந்த கூட்டமே சாட்சி என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2024-04-09 13:00 GMT

தேனி, 

தேனி பங்களாமேடு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை தி.மு.க நிறுத்தியது. திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட லேப்டாப் திட்டம் அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் செயல்படுத்தப்படும். விவசாயிகள், விவசாயத்தை அரவணத்து சென்றது அதிமுகதான்.

14 ஆண்டுகளுக்கு பிறகு பதவிக்காக ஒருவர் வந்துள்ளார் அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம் என்று கூறிய டிடிவி தினகரன் அவர்களோடு கூட்டணி வைத்துள்ளார். நோட்டாவுடன் போட்டி போடும் கட்சிதான் பாஜக என்று கூறியவர் டிடிவி தினகரன். விட மக்களை சந்திக்காதவர்களுக்கு வாக்களித்து என்ன பயன். நானும் ஒரு விவசாயி, விவசாயியின் கஷ்டம் எனக்கு தெரியும். முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிக்குக்கை நாம் கடவுள் போல வணங்க வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்