அரங்கிற்குள் எண்ட்ரி தந்த 'தல' டோனி... விண்ணை பிளந்த விசில் சத்தம்... தெறிக்க விட்ட ரசிகர்கள்

சென்னையை நான் இன்னொரு வீடாக நினைக்கிறேன்.

Update: 2022-06-01 16:13 GMT

சென்னை,

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் தொடங்கப்பட்டு 25வது ஆண்டு தின கொண்டாட்டம் சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள இமேஸ் ஆடிடோரியத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவர் சீனிவாசன், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.டோனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ்.டோனி,

"சென்னையை நான் இன்னொரு வீடாக நினைக்கிறேன்.இங்கிருந்து ஐபிஎல், ரஞ்சி உள்ளிட்ட போட்டிகளுக்கு வீரர்கள் வளர்ந்து வர வேண்டும். இந்திய அணிக்கு பெருமை சேர்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் இந்தியாவிற்காக விளையாடும்போது, மிகவும் பெருமையாக இருக்கும். மாவட்ட கிரிக்கெட் என்பது அனைவருக்கும் முக்கியமானது.

மாவட்ட அளவிலான போட்டிகள் மூலம் பல வீரர்கள் உருவாகியுள்ளளர். மாவட்ட அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடினால் தேசிய அளவிலான போட்டியில் விளையாட வாயப்பு கிடைக்கும். திறமையான வீர்ர்களை உருவாக்குவதில் மாவட்ட கிரிக்கெட் அமைப்புகளுக்கு பொறுப்புகள் அதிகம். கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும். 25 வது விழாவை கொண்டாடும் இந்த சங்கம் , 50 ம் ஆண்டு நிறைவு விழாவையும் கொண்டாட வேண்டும். ரஞ்சி, ஐபிஎல், இந்திய கிரிக்கெட் அணிக்கான வீரர்களை இந்த அமைப்பு உருவாக்க வேண்டும்

இந்த நேரத்தில் ராஞ்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் சிவாஜி படத்தில் ​"பேரை கேட்டாலே சும்மா அதிருதுல" என்ற வசனம் பிரபலம் அதுபோல

டோனி பெயரை சொன்னவுடன் 2 நிமிடம் அரங்கம் அதிர்ந்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்