'எனது வீட்டில் பொருட்களை திருடியதால் கொன்றேன்'
கன்னியாகுமரி அருகே மாயமான தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தனது வீட்டில் இருந்த பொருட்களை திருடி சென்றதால் நண்பருடன் சேர்ந்து கொன்றதாக கைதான மருமகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
கன்னியாகுமரி அருகே மாயமான தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தனது வீட்டில் இருந்த பொருட்களை திருடி சென்றதால் நண்பருடன் சேர்ந்து கொன்றதாக கைதான மருமகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
தொழிலாளி கொலை
கன்னியாகுமரி அருகே உள்ள சுண்டன்பரப்பை சேர்ந்தவர் மாசானம் என்ற கண்ணன் (வயது 32), தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். கண்ணன் கடந்த மாதம் 18-ந் தேதி மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
அப்போது கண்ணனை கடைசியாக சுண்டன்பரப்பைச் சேர்ந்த பாலன் என்கிற பாலகிருஷ்ணன் (34), சாமிதோப்பு பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் (19) ஆகியோர் அழைத்துச் சென்றது தெரிய வந்தது. இதில் பாலகிருஷ்ணன் உறவுமுறையில் கண்ணனின் மருமகன் ஆவார்.
இதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணன் மற்றும் விக்னேசை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் சேர்ந்து கண்ணனை கொன்று உடலை சுசீந்திரம் ஆசிரமம் அருகே உள்ள ஊட்டுவாழ்மடம் செல்லும் பாதையில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது.
எலும்புக்கூடு மீட்பு
இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று துண்டு துண்டாக கிடந்த எலும்புக் கூடுகளை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் மற்றும் விக்னேசை போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பாலகிருஷ்ணன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் சுண்டன்பரப்பு பகுதியில் வசித்து வருகிறேன். எங்கள் ஊரை சேர்ந்த கண்ணன் உறவு முறையில் எனது மாமா ஆவார். அவர் இந்த உறவு முறையில் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார்.
எங்கள் வீட்டில் சில பொருட்கள் திருட்டு போனது. இந்த நிலையில் மது போதையில் எனது வீட்டில் இருந்த பொருட்களை அவர்தான் திருடியதாக கண்ணன் கூறினார். இதுகுறித்து நான் அவரிடம் கேட்ட போது அவருக்கும் எனக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.
கல்லால் அடித்து ெகான்றோம்
இதையடுத்து சம்பவத்தன்று கண்ணனை மது குடிக்க வரும்படி எனது நண்பரான சாமிதோப்பை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் சேர்ந்து சுசீந்திரம் ஆசிரமம் அருகே உள்ள ஊட்டுவாழ்மடம் செல்லும் பாதைக்கு அழைத்துச் சென்ேறன். அங்கு வைத்து அவரது தலையில் கல்லால் அடித்து கொலை செய்தோம். பின்பு பிணத்தை அங்கேயே வீசிவிட்டு சென்று விட்டோம்.
இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் இருவரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.