'நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கு உடன்பாடில்லை' - மன்சூர் அலிகான்

‘இந்திய ஜனநாயக புலிகள்’ என்ற கட்சிப் பெயரை தேர்தல் ஆணையத்தில் மன்சூர் அலிகான் பதிவு செய்துள்ளார்.

Update: 2024-02-16 15:59 GMT

சென்னை,

நடிகர் மன்சூர் அலிகான் 'இந்திய ஜனநாயக புலிகள்' என்ற தனது கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் இன்று பதிவு செய்துள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது;-

"நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கே உடன்பாடில்லை. என்னை நான் ஒரு நடிகனாக பார்க்கவில்லை. சினிமாவில் நடிகராவதற்கு முன்னரே காவிரி போராட்டம், இலங்கை தமிழர்களுக்கான போராட்டம் உள்பட பல போராட்டங்களில் கலந்து கொண்டேன்.

தமிழ் இனத்திற்கு முன்னேற்றம் இல்லை. ஒரு தமிழனை பிரதமராக்க முடியவில்லை. ஒரு முடிவுடன் அரசியலில் இறங்கியிருக்கிறேன். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கட்சியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இது தமிழ் தேசியத்திற்கு எதிரான கட்சி அல்ல. இந்தியா முழுவதும் உரிமைக்காக போராடுவோம். தமிழக மீனவர்கள் பல கஷ்டங்களை சந்திக்கின்றனர். அனைத்து விவகாரங்களைக் குறித்தும் அதிரடி அரசியல் செய்ய இருக்கிறோம்."

இவ்வாறு மன்சூர் அலிகான் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்