நான் முதல்வன் திட்டம்: ஆசிரியர்களுக்கு ஜூன் 23-ந் தேதி பயிற்சி வகுப்பு - பள்ளிக்கல்வித்துறை

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு நாளை மறுநாள் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Update: 2022-06-21 15:19 GMT

சென்னை,

மாணவர்கள் கல்வி நிலையத்தை விட்டு வெளியேறும் போதே வேலை கிடைக்கவும், இடைநின்ற மாணவர்களின் திறனை வளர்த்து, வாழ்வாதாரம் சிறந்து விளங்கவும், மாணவர்களை தொழில் முனைவோராக்கவும் என எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த திட்டம் தான் நான் முதல்வன் திட்டம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு (ஜூன் 23-ந் தேதி) நாளை மறுநாள், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்பு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி வழங்க ஏதுவாக, அவர்களை தயார்படுத்தும் இந்த பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்