'நான் ஊதியத்திற்காக உழைப்பவன் அல்ல; ஊமை ஜனங்களுக்காக உழைப்பவன்' - ராமதாஸ் பேச்சு

இன்றைய சூழலில் தன்னால் ஓய்வெடுத்து ஒதுங்கி இருக்க முடியாது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

Update: 2024-02-01 14:08 GMT

சென்னை,

சென்னை எழும்பூரில் இன்று பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மக்களுக்காக உழைப்பது என்று வந்துவிட்டால், வயது ஒரு தடையில்லை என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது;-

"ஒரு குறிப்பிட்ட வயதில் ஓய்வு என்பது ஊதியத்திற்காக வேலை செய்பவர்களுக்குத்தான். நான் ஊதியத்திற்காக உழைப்பவன் அல்ல, ஊமை ஜனங்களுக்காக உழைப்பவன். தமிழ்நாட்டில் உள்ள ஊமை ஜனங்களெல்லாம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேறிவிட்டால் நான் நிம்மதியாக ஓய்வெடுக்கச் செல்வேன்.

ஆனால் இன்றைய சூழலில் என்னால் ஓய்வெடுத்து ஒதுங்கி இருக்க முடியாது. மக்களுக்காக உழைப்பது என்று வந்துவிட்டால், வயது ஒரு தடையில்லை."

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்