பெண்ணை தாக்கிய கணவர் கைது
நெல்லை அருகே பெண்ணை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது40). இவருடைய மனைவி ஆறுமுகம் (37). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் முருகன் அடிக்கடி மது அருந்திவிட்டு ஆறுமுகத்திடம் தகராறு செய்து வந்துள்ளார். பின்னர் ஆறுமுகத்தின் தந்தை வீடான உத்தமபாண்டியகுளத்தில் நடைபெறும் திருவிழாவிற்கு ஆறுமுகத்தின் அண்ணன் முருகனின் தம்பிக்கு தகவல் சொல்லி உள்ளார். அதற்கு முருகன், ஆறுமுகத்திடம் உனது அண்ணன் எனக்கு தகவல் சொல்லவில்லை எனக்கூறி நேற்று முன்தினம் ஆறுமுகத்தை அவதூறாக பேசி தாக்கினார். இதுகுறித்து ஆறுமுகம் தாழையூத்து போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தார்.