முக்கூடல்:
பாப்பாக்குடி அருகே உள்ள பள்ளக்கால் பொதுக்குடியை சேர்ந்தவர் முகம்மது யாசின் என்ற சங்கர் (வயது 35). இவருடைய மனைவி கதீஜா (34). கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் முகம்மது யாசின் என்ற சங்கர் தனது மனைவி கதீஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிந்து முகம்மது யாசின் என்ற சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.