கண்டியூர் பகுதியில் சுறுக்கு கம்பி வைத்து புள்ளிமானை வேட்டையாடிய கணவன்-மனைவி கைது

கண்டியூர் பகுதியில் சுறுக்கு கம்பி வைத்து புள்ளிமானை வேட்டையாடிய கணவன்-மனைவி கைது

Update: 2022-12-22 18:45 GMT

காரமடை

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட வெள்ளியங்காடு, கண்டியூர், மருதூர், கோடதாசனூர், ஆசனூர், திம்மம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக காரமடை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.அதன் பேரில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். இதன்படி கண்டியூர்மலை கரடு பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகத்தின் பேரில் நின்ற இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கெம்மாரம்பாளையம் சந்தானபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 62), அவரது மனைவி அம்மாசை (54) என்பதும், அவர்கள் சுருக்கு கம்பி வைத்து புள்ளிமானை வேட்டையாடி இறைச்சியை விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்