புத்தக கண்காட்சியை பார்வையிட்ட இல்லம் தேடிக்கல்வி மாணவர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் புத்தக கண்காட்சியை இல்லம் தேடிக்கல்வி மாணவர்கள் பார்வையிட்டனர்.

Update: 2023-02-25 18:53 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டத்தில் இல்லம் தேடிக்கல்வி திட்டம் கலெக்டர் ஜெயசீலன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் தன்னார்வலர்கள் தங்கள் மையத்திற்கு வரும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை குறைப்பதற்கான செயல்முறைகளுடன், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கல்வி சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக திருமலாபுரம், கம்மாப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் உயர் தொடக்க நிலை மையங்களின் 30 மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள் மாலதி, சுதா ஆகியோருடன் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்று வரும் தேசிய புத்தகக்கண்காட்சியை பார்வையிட்டனர். இவர்களுடன் இல்லம் தேடிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, வட்டார ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்