வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது.

Update: 2023-07-08 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடி கல்லூரி சாலையில் வசிப்பவர் கருப்பாயி (வயது 80). இவர் சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டை பூட்டிவிட்டு 100 அடி சாலையில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார்.

இந்த நிலையில் அவரது வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதாக அருகில் உள்ளவர்கள் கருப்பாயி உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு, உள் கதவுகள் பீரோக்கள் உடைக்கப்பட்டு வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள் ரூ.10 ஆயிரம், வங்கியில் ரூ.9½ லட்சம் டெபாசிட் செய்ததற்கான பத்திரங்கள், வீடு மற்றும் நிலங்களுக்கான பத்திரங்கள் ஆகியவற்றை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்