வீடு புகுந்து நகை-பணம் திருட்டு
வீடு புகுந்து நகை-பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 31) இவர் சம்பவத்தன்று அவரது வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்.இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். 1½ பவுன் தங்க நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, ரொக்க பணம் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.இந்த நிலையில் வீடு திரும்பிய முருகன் தனது வீட்டில் திருடுபோனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் அவர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.