வீடு புகுந்து விவசாயி குடும்பத்தினர் மீது தாக்குதல்

நிலப்பிரச்சினை காரணமாக வீடு புகுந்து விவசாயி குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2023-04-22 19:00 GMT


நிலக்கோட்டையை அடுத்த சித்தர்கள்நத்தம் அருகே உள்ள மல்லியம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 37). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக ஏற்பட்ட மோதல் குறித்து இருதரப்பினர் மீதும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை சிவக்குமார், அணைப்பட்டியில் உள்ள அவருடைய உறவினர் தென்னந்தோப்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மல்லியம்பட்டியை சேர்ந்த சிலர் சிவகுமாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதற்கிடையே அந்த கும்பலை சேர்ந்தவர்கள், சிவக்குமாரின் வீட்டுக்கு சென்று அவருடைய மனைவி கவுசல்யா மற்றும் 3 குழந்தைகளையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கவுசல்யா கொடுத்த புகாரின் பேரில் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


இதற்கிடையே விவசாயி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தாக்கப்பட்டது குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்