மின் கட்டண உயர்வை கண்டித்து ஓசூரில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து ஓசூரில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-07-23 18:07 GMT

ஓசூர்:

தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் ஓசூரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர்-ராயக்கோட்டை சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் முருகன், சகுந்தலா, பொதுச்செயலாளர்கள் மனோகர், அன்பரசன், பொருளாளர் சீனிவாசன், மாவட்ட மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் நாகேஷ் குமார் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்