பதிவு செய்யாத பெண்கள் விடுதிகள் மூடப்படும்

பதிவு செய்யப்படாத பெண்கள் விடுதிகள் மூடப்படும் என்று தேனி கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்

Update: 2022-07-14 16:59 GMT

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசின் மானியம் பெறும், பணிபுரியும் பெண்கள் விடுதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் பெண்கள் விடுதிகள், மதம் சார்ந்த நிறுவனங்கள், அறக்கட்டளை அல்லது சங்க பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்து மகளிருக்கான விடுதி நடத்துபவர்கள் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதி மற்றும் இல்லங்களை நெறிப்படுத்தும் சட்டம் 2014 மற்றும் விதி 2015-ன் கீழ் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

அதன்படி, தேனி மாவட்டத்தில் பதிவு செய்யாமல் செயல்படும் விடுதிகளை அதன் நிர்வாகிகள் https://tnswp.com என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். பின்னர் அதற்கான கருத்துருவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் வருகிற 20-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தவறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பதிவு செய்யாத விடுதிகளை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்