கண்களில் கருப்பு துணி கட்டி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்
பணி நிரந்தரம் செய்ய கோரி கண்களில் கருப்பு துணி கட்டி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
கூடலூர்,
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கண்களில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.