இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர் மையம் தொடக்கம்

காளையார்கோவிலில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர் மையம் தொடங்கப்பட்டது.

Update: 2022-06-23 19:10 GMT

காளையார்கோவில், 

இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் காளையார்கோவில் ஒன்றியத்தில் 208 தொடக்க நிலை மற்றும் 127 உயர் தொடக்க நிலை தன்னார்வலர் மையங்கள் செயல்படுகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் புதிதாக 40 தொடக்க நிலை மற்றும் 27 உயர் தொடக்க நிலை தன்னார்வலர் மையங்கள் கூடுதலாக தொடங்கப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக காளையார்கோவில் அருகே பனங்காடி சேம்பர், சிலுக்கபட்டி, ஒருப்போக்கி, வேளாரனேந்தல், சூரக்குளம் புதுக்கோட்டை, என்.மணக்குடி ஆகிய இடங்களில் தன்னார்வலர் மையங்களுக்கான தொடக்க விழா நடைபெற்றது. இதேபோல் காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள பனங்காடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதலாக 2 தன்னார்வலர் மையங்களின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் ஜேம்ஸ் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் சகாய செல்வன், ஆலிஸ் மேரி, வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி தலைமையாசிரியை சந்திரமதி வரவேற்றார். தன்னார்வலர்கள் புனிதா, காயத்ரி ஆகியோருக்கு சிறப்பு விருந்தினர்கள் தன்னார்வலர் கையேடு, சுவரொட்டிகள், அட்டைகள், தகவல் பலகைகள் மற்றும் நூலக புத்தகங்கள் வழங்கி வாழ்த்துரை வழங்கினர். முடிவில் ஆசிரியர் ராசாக்கண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்