புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி

குன்னூர் அருகே புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர் பவனி நடந்தது.

Update: 2022-09-09 15:14 GMT

குன்னூர், 

குன்னூர் அருகே பாய்ஸ் கம்பெனியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி மரியன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி, மறையுரை நடந்து வந்தது. விழாவையொட்டி நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ், பங்கு தந்தை ரிசோரியா ஆகியோர் தலைமையில் கூட்டு திருப்பலி, மறையுரை நடைபெற்றது. பின்னர் மாலையில் நடைபெற்ற‌ சிறப்பு வழிபாட்டில் பங்கு தந்தைகள் அருள்சாமி, ஜோசப் ராஜ், மேத்யூ பாலு, அந்தோணி ராஜ் ஆகியோர் தேர் பவனியை தொடங்கி வைத்தனர். அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஆேராக்கிய அன்னை சொரூபம் இருந்தது. பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்துகொண்டனர். இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் மரியன்னையின் பிறந்தநாளையொட்டி, சிறப்பு திருப்பலி நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்