கீழடி அருங்காட்சியகத்துக்கு வெள்ளிக்கிழமைதோறும் விடுமுறை

கீழடி அருங்காட்சியகத்துக்கு வெள்ளிக்கிழமைதோறும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

Update: 2023-04-12 18:45 GMT

திருப்புவனம், ஏப்.13-

கீழடியில் அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த மாதம் 5-ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. தற்போது தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்துஅருங்காட்சியகத்தை நேரில் பார்த்து செல்கின்றனர்.. இதுவரை சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அருங்காட்சியகம் வந்து பொருட்களை பார்வையிட்டுள்ளனர் என கூறப்படுகிறது.

தற்போது வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்கி வரும் கீழடி அருங்காட்சியகம் சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மற்ற அருங்காட்சியகங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை கீழடி அருங்காட்சியகத்திலும் பின்பற்றிடும் வகையில் பிரதி வெள்ளிக்கிழமைதோறும் வார விடுமுறையாகவும் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் விடுமுறை அளித்தும் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிரதி வெள்ளிக்கிழமை வார விடுமுறை மற்றும் தேசிய விடுமுறை நாட்களான குடியரசு தினம், சுதந்திர தினம், மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களிலும் விடுமுறை அளித்தும் ஆணையிடப்பட்டுள்ளது. எனவே கீழடி அருங்காட்சியகத்திற்கு வார விடுமுறையான பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் மேற்கண்ட தேசிய விடுமுறை நாட்களை பொதுமக்கள் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும், நாளை தமிழ் புத்தாண்டு வெள்ளிக்கிழமை முதல் பிரதி வாரம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்