பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தர்மபுரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை முதல் மழை பெய்ய தொடங்கியது. நேற்று காலை முதல் இரவு வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த தொடர் மழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அறிவித்து கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.