ஓட்டப்பிடாரத்தில்இந்து மக்கள் கட்சி கூட்டம்
ஓட்டப்பிடாரத்தில்இந்து மக்கள் கட்சி கூட்டம் நடந்தது.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரத்தில் இந்து மக்கள் கட்சி ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் உலகாண்ட.ஈஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் பொன்ராஜேந்தரின் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர். மாரிமுத்து முன்னிலை வைத்தார். சிறப்பு விருந்தினராக மாநில பொது செயலாளர் ரவிகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஒன்றிய துணைதலைவர். சிவநனந்தபெருமான், ஒன்றியசெயலாளர் பால், ஒன்றிய இளைஞரணி தலைவர் அருண்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 108 இடங்களில் விநாயகர்சிலை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், விவசாய கிணறுகளில் நிலத்தடிநீர் குறைந்து வருவதால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் காற்றாலை அமைக்கப்படுவதை தமிழக அரசு தடைசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.