இந்து மக்கள் கட்சியினர் கைது

நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-09-27 21:21 GMT

தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசா, இந்துக்களை பற்றி அவதூறாக பேசியதாக பல்வேறு அமைப்பினர் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியினர் நேற்று வண்ணார்பேட்டை சாலை தெருவில் ஆ.ராசா உருவ பொம்மையை எடுத்து வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி போலீஸ் கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாவட்ட தலைவர் உடையார், மாநில செயலாளர் அய்யப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் 9 பேரை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்