இந்து முன்னணி ஆலோசனை கூட்டம்

சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-06-10 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் ஒன்றிய இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பூவுடையார்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்து முன்னணி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேலன், இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்க மாவட்ட பொருளாளர் ரவிசந்தர் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.

கூட்டத்தில் சாத்தான்குளம் ஒன்றியத்திற்கு இந்து முன்னணி புதிய ஒன்றிய கமிட்டி அமைப்பது சம்பந்தமாகவும் 5 ஊராட்சிக்கு 2 பேர் கொண்ட குழு அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில் ஒன்றிய கமிட்டிக்கு 10 பேரும், 5 ஊராட்சி கமிட்டிக்கு 2 பேர் வீதம் 10 பேரும் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்