அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலின் கொள்முதல் விலை உயர்வு - ஆவின் நிர்வாகம் முடிவு
அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை,
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க பால் உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து தமிழக அரசிடம் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன. இது குறித்து பரிசீலித்து முடிவு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி அதிக கொழுப்பு மற்றும் இதர சத்துள்ள பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தரமான பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 ஊக்கத்தொகை அளிக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார். பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.