4 வழிச்சாலை பணியை தலைமை பொறியாளர் சந்திரசேகர் நேரில் பார்வையிட்ட ஆய்வு
பல்லடம்-புத்தெரிச்சல் 4 வழிச்சாலை பணியை தலைமை பொறியாளர் சந்திரசேகர் நேரில் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார்.
பல்லடம்-புத்தெரிச்சல் 4 வழிச்சாலை பணியை தலைமை பொறியாளர் சந்திரசேகர் நேரில் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டார்.
4 வழிச்சாலையாக மாற்றம்
பல்லடத்தில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையானது மாநில நெடுஞ்சாலை. இந்தச்சாலை தமிழக நெடுஞ்சாலை துறை திருப்பூர் கோட்டத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சாலையில் பல்லடத்தில் இருந்து புத்தெரிச்சல் வரையிலான 11.80 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இரு வழிச் சாலையானது ரூ.115 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆய்வு
இந்த சாலைப்பணியின் தரம் குறித்து சென்னை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் சந்திரசேகர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணிகள் குறித்து சில அறிவுரைகளையும் வழங்கினார்.
ஆய்வின்போது திருப்பூர் கண்காணிப்பு பொறியாளர் வளர்மதி, திருப்பூர் கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா, திருப்பூர் தரக்கட்டுப்பாட்டு கோட்ட பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்லடம் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.