ஆதிதிராவிட நலத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

ஆதிதிராவிட நலத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-04-29 17:44 GMT

குடியாத்தம்,

ஆதிதிராவிட நலத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.

குடியாத்தம் காந்தி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அரசின் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் மக்கள் மறுமலர்ச்சி தடம் என்ற தன்னார்வ அமைப்பு இணைந்து 'விழுதுகளை வேர்களாக்க' என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சிகளை நடத்தியது.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மக்கள் மறுமலர்ச்சி தடம் மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் வாழ்த்தி பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி கலந்து கொண்டு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் விஜயகுமார், மன்னர்மன்னன் ஆகியோர் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தினார்கள். நிகழ்ச்சியில் தாசில்தார்கள் விஜயகுமார், முரளிதரன் உள்பட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் முடிவில் குடியாத்தம் தனி வட்டாட்சியர் சந்தோஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்