மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டல் முகாம்; இன்று நடக்கிறது

மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டல் முகாம் இன்று நடக்கிறது.

Update: 2023-06-23 19:16 GMT

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ-மாணவிகளுக்கு 'நான் முதல்வன் திட்டத்தின்' கீழ் உயர்கல்வி வழிகாட்டல் முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் அரியலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. முகாமில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளில் விண்ணப்பித்தல், சேர்க்கை, கல்வி கடன் உதவி தொகை, முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்று, வருமான சான்று மற்றும் விடுதியில் தங்கி படித்தல் உள்ளிட்ட சேவைகள் செய்து தரப்படவுள்ளது. இந்த முகாமில் மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டு உயர்கல்வியில் சேர்ந்து பயனடையலாம். மாவட்ட நிர்வாகம் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது, என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்