தீபாவளி பண்டிகை: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்...!
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு மக்கள் புறப்பட்டு வருகின்றனர்.
சென்னை,
தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் வசிக்கும் வெளிமாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் பஸ்கள் தவிர, மக்கள் தங்களது சொந்த வாகனங்களான கார் மற்றும் பைக்கிலும் பயணம் செய்து வருகின்றனர்.
அதேவேளை, ரெயில் மூலமாகவும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில் மூலம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். முன்பதிவு இல்லா பெட்டிகளில் ஏற ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் தவிர தாம்பரம் ரெயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கூட்ட நெரிசலை சீர்செய்யும் பணியில் ரெயில்வே போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.