தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் மே 1 ஆம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னையில் 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல் உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.