தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை - களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புக் குழு

தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்.

Update: 2022-11-11 02:28 GMT

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தை பொருத்தவரையில் 3 மாவட்டங்களுக்கு தீவிர கனமழையும், 15 மாவட்டங்களுக்கு அதிகனமழையும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்கள், தங்களுக்கு பேரிடர் மீட்பு வீரர்கள் தேவை என கேட்டுக்கொண்டதற்கு இணங்க அரசு சார்பில் இந்த நான்கு மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர். 

குறிப்பாக மழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்வது, மேலும், மழைகாலங்களில் எதிர்பாராதவிதமாக நிகழக்கூடிய பாதிப்புகளின் போது, மீட்பு நடவடிக்கைகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினரின் பணி முக்கியமானது.

அந்த வகையில் தேனி, திண்டுக்கல், நீலகிரி, ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர்  விரைந்துள்ளனர்.    

 

Tags:    

மேலும் செய்திகள்