திருப்புவனம் பகுதியில் பலத்த மழை

திருப்புவனம் பகுதியில் பலத்த மழை பெய்தது.

Update: 2022-09-05 17:22 GMT

திருப்புவனம்,

திருப்புவனம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழையாக விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்பு இரவு பலத்த மழை பெய்தது. மழை பெய்து கொண்டிருக்கும்போதே பயங்கரமான இடியுடன் மின்னல் வெட்டியது. இந்த மழை விட்டு விட்டு அதிகாலை வரை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் கிராமப் பகுதிகள், சாலைகள், வயல்வெளி பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும் பள்ளமான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் காட்சியளிக்கிறது. இந்த மழையால் விவசாயக்கிணறுகள், குடிநீர் கிணறுகளில் நீர்மட்டம் நன்கு உயர வாய்ப்புள்ளது. நேற்று முன்தினம் பெய்த மழையால் வெயிலின் வெப்பத்தாக்கம் குறைந்து குளுமையான சூழ்நிலை நிலவுகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் அளவு 38.04 மில்லி மீட்டர் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்