குமரியில் அணைப்பகுதிகளில் பலத்த மழை

குமரியில் அணைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

Update: 2023-03-26 15:17 GMT

குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதுதவிர திருநந்திக்கரை, குலசேகரம், திற்பரப்பு, களியல், பொன்மனை, சுருளகோடு, பூதப்பாண்டி, கீரிப்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து சற்று அதிகரித்தது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்