கோவையில் பலத்த மழை

கோவையில் பலத்த மழை பெய்தது. இதில் மழை வெள்ளத்தில் மினிபஸ் சிக்கியதால் பயணிகள் தவித்தனர்.

Update: 2023-05-02 18:45 GMT

கோவையில் பலத்த மழை பெய்தது. இதில் மழை வெள்ளத்தில் மினிபஸ் சிக்கியதால் பயணிகள் தவித்தனர்.

கோவையில் மழை

கோவையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை கோவைப்புதூர், பேரூர், உக்கடம் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. போத்த னூரில் 7 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி வருகிறது. மேட்டுப்பாளையம் ரோடு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெறுகிறது.

இதனால் வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது.

வாகன ஓட்டிகள் அவதி

சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் மழைநீர் தேங்கி யது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இருசக்கர வாகனங்களில் சென்ற சிலர் தவறி விழுந்தனர்.

தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளதால், நீலகிரி மாவட்டத்துக்கு பெரியநாயக்கன்பாளையம் வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மழை வெள்ளத்தாலும், குண்டும், குழியுமான சாலைகளாலும் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன.

கவுண்டம்பாளையத்தில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது.

இந்த பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையில் மழை வெள்ளம் 3 அடி உயரத்துக்கு தேங்கி நின்றது. அப்போது அந்த வழியாக சென்ற மினி பஸ் திடீரென்று வெள்ளத்தில் சிக்கியது. இதனால் பஸ்சில் 15 பயணிகள் கூச்சலிட்டனர்.

சீரமைக்க வேண்டும்

இதை அறிந்த அந்த பகுதி மக்கள் விரைந்து செயல்பட்டு, மினி பஸ்சில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர். இது போல் ரெயில் நிலையம் செல்லும் சாலை, சாரதா மில் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகனங்களில் சென்றவர்கள் அவதிப்பட்டனர்.

கோவையில் பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அதில் மழைநீர் தேங்கி நிற்கும் போது குழி இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே மழை பெய்யும் சாலைகளில் மழைநீர் தேங்கு வதை தடுக்கவும், சாலைகளை சீரமைக்கவும் மாநகராட்சி நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வற்புறுத்தினார்கள்.

மேலும் செய்திகள்