அன்னவாசல் பகுதியில் கனமழை

அன்னவாசல் பகுதியில் கனமழை பெய்தது.

Update: 2022-07-21 19:01 GMT

அன்னவாசல்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனை தொடர்ந்து நேற்று மாலை இலுப்பூர், அன்னவாசல், சித்தன்னவாசல், குடுமியான்மலை, முக்கண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை தொடங்கிய கன மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தொடர் மழையால் அன்னவாசல் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

இதேபோல் ஆதனக்கோட்டை, சொக்கநாதப்பட்டி, சோத்துப்பாளை, வளவம்பட்டி, கல்லுக்காரன்பட்டி, கணபதிபுரம், தொண்டைமான்ஊரணி, வண்ணாரப்பட்டி, குப்பையன்பட்டி, கருப்புடையான்பட்டி, வெள்ளவெட்டான்விடுதி, மட்டையன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கன மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்