பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மனமார்ந்த நன்றி - திருமாவளவன் டுவீட்
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் தாயார் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருமாவளவனின் தாயார் விரைவில் குணமாகி மீண்டு வந்து திருமாவளவன் மீது அன்பை பொழிய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து தொல். திருமாவளவன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
"அம்மாவின் உடல்நலம் தேறிட அகம்நெகிழ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள
அன்புக்குரிய பாஜக மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் மாந்தநேய மாண்புக்கு மனமார்ந்த நன்றி. கட்சி அரசியலைக் கடந்து கனிவைக் காட்டும் பண்பு போற்றுதலுக்குரியது. அவருக்கு எனது வாழ்த்துகளும்..நன்றியும்.." என்று குறிப்பிட்டுள்ளார்.