சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்

சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும்

Update: 2023-08-30 20:45 GMT

பந்தலூர்

பந்தலூர் அரசு ஆஸ்பத்திரி, தாலுகாவின் தலைமை ஆஸ்பத்திரியாக உள்ளது. இங்கு பந்தலூர் மட்டுமின்றி மேங்கோரேஞ்ச், உப்பட்டி, பொன்னானி, குந்தலாடி, பிதிர்காடு, பாட்டவயல், அம்பலமூலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, சேரம்பாடி, எருமாடு, நெலாக்கோட்டை, கரியசோலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான வெளிநோயாளிகள் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். மேலும் உள்நோயாளிகளும் தங்கி சிசிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் அங்கு கை கழுவ செல்லும் பகுதியில் அசுத்த நீர் நிரம்பி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி சுகாதாரமற்று காணப்படுகிறது. இதனால் சிகிச்சை பெற வந்து செல்லும் நோயாளிகளுக்கே நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையை போக்க அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்