தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூரில் தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-13 18:45 GMT

கடலூர்

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணி விதிகளில் திருத்தம் செய்து பதவி உயர்வு வழங்கிட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆங்கில பிரிவு மாணவர்களுக்கு அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் அரசு வழங்க வேண்டும். மாநகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறன் மேம்பட உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகம் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தினர் நேற்று கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஏழுமலை, மாவட்ட செயலாளர் காளமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்