ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் கைது
ராமேசுவரத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் சந்தியா நகர் பகுதியை சேர்ந்தவர் லியோ. இவர் தனது வீட்டின் மேல் பகுதி வழியாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகளை மாற்றுப்பாதை வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்று ராமேசுவரம் மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்து இருந்தார்.
அந்த மனுவை பரிசீலித்த மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் வணிக ஆய்வாளர் அருள்மரிய டார்ஜன், உயர்மின்னழுத்த கம்பிகளை மாற்ற இவரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து லியோ, ராமநாதபுரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
போலீசார் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.5 ஆயிரத்தை லிேயா எடுத்துக்கொண்டு நேற்று மாலை ராமேசுவரம் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார்.
கைது
அங்கு பணியில் இருந்த வணிக ஆய்வாளர் அருள்மரிய டார்ஜனிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அதை அவர் வாங்கிக்கொண்டார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.