விபத்தில் சிக்கிய மகனை மீட்டுத்தர வேண்டும்

மலேசியாவில் விபத்தில் சிக்கிய மகனை மீட்டுத்தர வேண்டும்; கலெக்டர் அலுவலகத்தில் தந்தை மனு

Update: 2023-08-01 18:45 GMT


கூத்தாநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட செருவாமணி வடக்கு தெருவை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், 4 மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவரது 3-வது மகன் மணிகண்டன். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு ஜோபார்டனில் வாட்டர் சர்வீஸ் கம்பெனியில் பணி செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி தனது அண்ணன் அய்யப்பனுக்கு வாட்ஸ் அப் வீடியோ கால் செய்து தனது குடும்பத்தில் உள்ளவர்களிடம் மணிகண்டன் பேசி உள்ளார். இதையடுத்து கடந்த 30-ந் தேதி இரவு மணிகண்டன் விபத்தில் சிக்கி உள்ளதாக மலேசியாவில் உள்ள மணிகண்டனின் நண்பர்கள் மூலம் அய்யப்பனுக்கு தகவல் வந்துள்ளது. இதுகுறித்து மணிகண்டன் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளரிடம் தொடர்பு கொண்டபோது, யாரும் பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து கிராம மக்கள் உதவியுடன் சவுந்தர்ராஜன் நேற்று முன்தினம் இரவு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் விபத்தில் சிக்கிய மகனை மீட்டுத்தர மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்